அஜ்மல் கசாப்பின் மரண தண்டனை உறுதி
2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் ஒருவன் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவன் மீது மும்பை துணை நிலை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் அவனுக்கு மரண தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது.
இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக தீவிரவாதி கசாப் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டான். விசாரணைக்குப் பிறகு அதுவும் தள்ளுபடியாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். அதன் மீதான வழக்கு விசாரணை முடிந்து, மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைவர்கள், கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இதுபற்றி கூறும்போது,
‘உச்ச நீதிமன்றம் அஜ்மல் கசாப்பிற்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. அதனை அடுத்து பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
தீவிரவாதி அஜ்மல் கசாப் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பித்தால், அதுகுறித்து உடனடியாக நிராகரிக்கப்படும். இந்தியாவிற்கு எதிராக அமைதியை குலைக்கும் நோக்கத்தில் பாகிஸ்தானிலிருந்து இணையதளம் மூலம் ஏற்றப்பட்ட பதிவுகள் குறித்த சாட்சியங்களை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளும்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply