போதியளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது – பெற்றோலிய வளத்துறை அமைச்சு
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதியளவு பெற்றோல் கையிருப்பு உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 35 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளைத் தாங்கிய கப்பலொன்று இன்று நண்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவு பெற்றோல் கையிருப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ள பெற்றோலின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பெற்றோலிய சேவைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் கூட்டுத்தாபனத்தில் 70 மெட்ரிக் தொன் பெற்றோலை களஞ்சியப்படுத்த முடியும் எனவும் சங்கத்தின் பிரதான செயலாளர் ஆனந்த பாலித்த கூறினார்.
கொலன்னாவையில் 40 மெட்ரிக் தொன் பெற்றோலும் முத்துராஜவெலவில் 30 மெட்ரிக் தொன் பெற்றோலும் வழமையாக களஞ்சியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் எரிபொருள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் பெற்றோலிய தேசிய சேவைகள் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply