வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களை தொடர்பாக தோட்ட துறைகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் தவிர்க்கும் நோக்கில் தாம் உரிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் தோட்ட மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் விசேடமாக மேலதிக நடமாடும் பாதுகாப்பு சேவைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பணிப்புரைகள் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சப்பரகமுவவில் போட்டியிடும் மலையக கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply