சிரிய மோதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை

சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல் சம்பவங்கள் காரணமாக லெபனானில் வசித்து வரும் இலங்கையர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என லெபனானில் உள்ள இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரட்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த நாட்டில் வசித்து வரும் சுமார் 85 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேர் வரையிலானோர் லெபனானின் வடக்குப் பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

தற்போதைய மோதல் சம்பவங்கள் வட பகுதி நோக்கி பரவி வருவதாக தூதுவர் எமது செய்திப் பிரிவிற்குத் தெரிவித்தார்.

அரசாங்க துருப்பினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலை அடுத்து நாட்டின் விமான நிலையங்கள் உடனான போக்கு வரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அங்குள்ள இலங்கையர் தொடர்பான தூதுவர் ஆலயம் அவதான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply