அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இலங்கை ஆதரவு

அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான பல்முனை பிரயத்தனங்களுக்கும் இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

16 வது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் தாம் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பூகோள ரீதியாக அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

‘சவால்களுக்கு மத்தியில் ஒன்றிணைந்த நிர்வாகத்தின் ஊடான நிலையான சமாதானம் ” என்ற தொனிப்பொருளில் இந்த முறை அணிசேரா நாடுகளின் மாநாடு நேற்றும் இன்றும் இடம்பெறுகிறது.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும், அதன்பின்னரான சவால்களை வெற்றிக்கொள்வதற்கு தமது அரசாங்கத்தாலும் மக்களை அடிப்படையாகவும் கொண்ட செயற்பாடு ஒன்று அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply