பல்லம் ராஜுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்கள் கைது

இலங்கைப் படையினருக்கு தமிழகத்திலோ, அல்லது இந்திய நாட்டிலோ எங்கேனும் ராணுவ பயிற்சிகள் வழங்கப்படக் கூடாது என்று தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் திகதியும் தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இலங்கை படையினருக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்னும் வாக்குறுதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அறப்போராட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே நடைபெறவுள்ளதக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய ராணுவத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு அண்மையில் இலங்கை படையினருக்கான பயிற்சிகள் இடம்பெறும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில் அமைச்சரைக் கண்டித்து ஆங்காங்கே விடுதலைச் சிறுத்தைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றும் கோவையில் அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கலைக்காவிரி கவின்கலைக் கல்லூரியில் நேற்று இலங்கை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியினர் கல்லூரிக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கே இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான கலை பண்பாட்டு கலாசார பரிவர்த்தனை திட்டத்தின் கீழ்இ இலங்கையில் இருந்து வந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

நேற்று இலங்கை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் இதனை எதிர்த்து, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கலைக்காவிரி கவின்கலைக் கல்லூரிக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply