25 வைத்திய அதிகாரிகளும், உதவி அதிகாரிகளும் வவுனியாவுக்கு அனுப்பிவைப்பு

வன்னியிலிருந்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விசேட வைத்திய குழுவொன்று வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 
 
25 வைத்திய அதிகாரிகளும், உதவி அதிகாரிகளும் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் வன்னியிலிருந்து காயமடைந்துவரும் நோயளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவார்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் தகவல்களுக்கு அமைய சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 200ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களும், முதியவர்களும் எனக் கூறப்படுகிறது. அத்துடன், நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் வவுனியா வைத்தியசாலையில் மருந்துப் பொருள்களுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply