கூடங்குளம் அணுமின் நிலைய பாதிப்பு தொடர்பில் பேச்சு – இலங்கை

தமிழ்நாடு கூடங்குளம் அணுமின் நிலையத்தினால், இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம கருத்து தெரிவிக்கையில்,

பேச்சுவார்த்தை ஒன்றினை இந்திய மத்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை இந்திய அணு மின் நிலையங்கள் தொடர்பான நிபுணர்களும் பங்குகொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் இலங்கை சுற்றுச்சூழல் நிபுணர்களினால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு அமைய, தென்னிந்திய அணு மின் நிலையம் இலங்கையில் இருந்து 240 கிலோமீற்றர் தூரத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மிகக் கிட்டிய தூரத்தில் இந்த நிலையம் அமைவது இலங்கைக்கு பாதிப்பை தரலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், அதனால் எந்தவிதமான பாரிய பாதிப்புக்களும் இந்தியாவிற்கு ஏற்படப் போவதில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply