புலிகளுக்கான ‘கெடு’ முடிந்ததும் ராணுவம் தாக்கும்: வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்

48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்.அப்பாவித் தமிழர்கள் புலிகளின் பகுதியிலிருந்து விலகி, ‘பாதுகாப்பான பகுதி’ என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர இலங்கை அரசு 48 மணி நெர கெடுவை விதித்துள்ளது. இந்தக் கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

ஆனால் இந்த கெடுவை ஏற்று அரசுப் பகுதிக்கு வர மக்களிடையே முழு ஆதரவு இல்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் வரவில்லை.

இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்ததும் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்.

இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

புலிகளின் பங்கர் சிக்கியது

இதற்கிடையே, முல்லைத்தீவு கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பங்கர் ஒன்றை ராணுவம் பிடித்துள்ளது.

இந்த பங்கர் அதி நவீனமானதாக இருப்பதாகவும், உள்ளுக்குள் லிப்ட் இருப்பதாகவும், இதை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் ராணுவம் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களில் இலங்கைப் இராணுவத்தினர் பிடித்துள்ள 3வது பங்கர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள முல்லைத்தீவு மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் ஆழ ஊடுறுவும் படைப் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் இன்று மாலையில் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து அவர்கள் உள்ளே புகுந்து மீதமுள்ள புலிகளின் பகுதிகளை மீட்பதற்காக அனுப்பப்பட்டு வருகின்றனராம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply