இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது! தமிழக காங்கிரஸ் உறுதி

இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை விரைவில் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மத்திய ராணுவ மந்திரியை டெல்லியில் சந்தித்து இதுகுறித்து விளக்கமாக எடுத்துக் கூறுவோம்.

இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக காங்கிரசும் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply