ஜனாதிபதி இம்மாதம் இந்தியா செல்கிறார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த மாத இறுதியினில் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சாஞ்சி விகாரைக்கு ஒத்ததாக அமைக்கப்படும் சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்வார் என ஏசியன் ஏஜ் செய்தி வெளியிட்டுள்ளது.
பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே யும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என இந்திய நாடாளுமன்றத்தில் சுஸ்மா சிவ்ராஜ் நேற்று அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாயிரத்து 600வது சம்புத்தத்வ ஜயந்தியில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply