அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பிரிட்டனுக்கு செல்கிறார்
நாளை திங்கட்கிழமை அமைச்சர் குறித்த விரிவுரையை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பிரித்தானியா – இலங்கை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பாகவும், அமைச்சர் இதன்போது விளக்கமளிக்கவுள்ளார்.
இதுதவிர, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பிரித்தானியாவில் மேற்கொள்ளும் விஜயத்தின் போது அங்குள்ள உயர்மட்ட அரச அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, பிரித்தானிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் காரியாலயம் இலங்கை தொடர்பில் வெளியிட்டிருந்த சுற்றுலாத்துறை சார் எச்சரிக்கை அறிக்கையை மீளாய்வு செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவிடம் கோரியுள்ளது.
இந்தவிடயம் தொடர்பாக மேலதிக தீர்மானங்கள் தொடர்பாக அமைச்சர், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply