ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட இலங்கை இணக்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிரான பிரேரணைமனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டதனையடுத்து இலங்கை குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து பல கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

அத்துடன் இந்தியா ஆதரித்ததனால் அவர்களை அவமதித்தும் செயற்ப்பட்டனர்.அத்துடன் வெளிநாடுகள் எமது சொந்தப் பிரச்சினைக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது என்றும் அறிவித்திருந்தனர்.

எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆணைக்குழு அமர்வில் ஆராயப்படவுள்ளது. இதற்கும் இலங்கை அரசு பல்வேறு கதைகளையே பேசிவந்தது.

ஆயினும் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்வது என்று இலங்கை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்கஇ கடந்த வாரங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்ப்பு வெளியிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைக்குறித்து விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராயும் முகமாக ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply