பொருளாதாரத்திற்காகவே இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோருகின்றனர்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்கள், அகதிகள் அல்லர் எனவும் அவர்கள் பொருளாதார குடியேற்றவாசிகள் எனவும் பிரதி எதிர்க்கட்சி தலைவர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இலங்கையர்கள் அகதிகள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவை வந்தடையும் இலங்கையர்களை மீளவும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக நாடு கடத்தும் திட்டத்தை அமுல்படுத்த முடியாது என அவுஸ்திரேலிய குவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் கோருவதனைப் போன்று புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக நாடு கடத்தும் திட்டமானது சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply