ஜெயலலிதாவுக்கு இலங்கைத் தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது – கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி இன்று திமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தது குறித்து திமுக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து? என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
இதே ஜெயலலிதா தமிழக சட்டபேரவையில், பிரபாகரனை கைது செய்ய வேண்டுமென்று தீர்மானம் போட்டவர்தானே?
போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று இலங்கையில் போர் நடந்தபோது சொன்னவர்தானே? அவருக்கு இலங்கைத் தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது என்று பதில் அளித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply