அம்பாறையில் சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாது
இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்களுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கஃபே அமைப்பு எச்சரித்துள்ளது.
அங்கு தொடரும் தேர்தல் வன்முறைகள் பற்றி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக கஃபே அமைப்பின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதான இணைப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணமே தேர்தல் விதிமீறல்கள் அதிகரிக்கும் மாகாணமாக உள்ளதாகவும் கஃபே அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நீலநிற ஆடைகளுடன் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்திவருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான, நீதியான தேர்தலை உறுதி செய்வதற்காக காவல்துறையினருடன் இணைந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
பதவிநிலை அதிகாரிகள் தரத்தில் இருப்பவர்களைத் தவிர ஏனைய அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் இருப்பதாகக் கூறிய பிரதி ஆணையாளர், ஆனால் அவர்களை பிரசாரங்களில் ஈடுபடுமாறு அமைச்சோ அரச திணைக்களங்களோ பணிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply