இலங்கை யாத்திரிகர்கள் அதிகாலை பூண்டிமாதா அலயத்தை விட்டு வெளியேறினர்

தஞ்சை அருகே உள்ள பூண்டியில் புகழ்பெற்ற மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சிங்கள யாத்திரிகர்கள் 177 பேர் நேற்று வந்தனர்.

இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த அவர்கள் வானில் பூண்டி வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க வந்தனர். இந்த தகவல் தமிழ் அமைப்புகளுக்கு கிடைத்தது. அவர்கள் சிங்களர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லை யென்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

இதனைதொடர்ந்து பூண்டி மாதா கோவிலில் பொலிஸ் டி.எஸ்.பி.க்கள் இளம்பரிதி, காஜாமைதின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தஞ்சை உதவி கலெக்டர் காளிதாஸ், பூண்டி மாதாகோவிலில் முகாமிட்டிருந்தார். நேற்று மாலை நாம் தமிழர் இயக்கத்தினர் வக்கீல் நல்லதுரை தலைமையிலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் விவேகானந்தன் தலைமையிலும், தமிழ்தேச பொதுவுடமைக்கட்சியை சேர்ந்தவர்கள் குழ.பால்ராஜ் தலைமையிலும் திரண்டனர். இவர்களிடம் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனை தமிழ் அமைப்புகள் ஏற்கவில்லை. இவர்கள் அனைவரும் பூண்டி பேராலய அறையை முற்றுகையிட்டும், கீழே அமர்ந்தும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகவும், பூண்டி மாதா கோவிலில் தங்கியுள்ள சிங்களர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம், இன்று வெளியேறி விடுவதாக கூறப்பட்டதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த அமைப்பினர் கலைந்து சென்ற சிறிது நேரத்தில் மக்கள் உரிமை இயக்கத்தினர் செயலாளர் பழ.ராஜ்குமார் தலைமையிலும், விடுதலை தமிழப்புலிகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் பூண்டி மாதா ஆலயத்தில் பரபரப்பு உருவானது. இன்று அதிகாலை 3 மணிக்கு பூண்டி மாதா ஆலயத்தில் தங்கி இருந்த 177 யார்திரிகர்களும் வான்களில் வெளியே புறப்பட்டு சென்றனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களை பத்திரமாக திருச்சி அழைத்து சென்று அங்கிருந்து விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply