வடகொரியா புயலில் 56 பேர் பலி: 20 ஆயிரம் பேர் பாதிப்பு
வட கொரியாவின் வட பகுதியில் புயல் தாக்கியது. அப்போது பலத்த சூறை காற்றுடன் பேய்மழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சூறைகாற்று மற்றும் வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில பலரும் பலியாகி இருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். புயலில் பாதிக்கப்பட்ட பலர் உணவு பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கு ஐ.நா உணவு அமைப்பு உதவ வேண்டும் என்று வட கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
வட கொரியாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 169 பேர் பலியானார்கள. 2லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இப்போது புயல் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply