தோல்வி பீதியின் தாக்குதலில் அரசு – ரில்வின் சில்வா

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தோல்வியடையக் கூடும் என்ற பீதி அரசாங்கத்தை தாக்கியுள்ளதாக ஜே.வி.பிசுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாகவே அரசாங்கம் பாரியளவில் தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட சட்டங்களை ஆளும் கட்சி வேட்பாளர்களை மதிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் பாரியளவில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வட மத்திய மாகாண முதலமைச்சர் 40 உத்தியோக பூர்வ வாகனங்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டள்ளதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply