இலங்கை யாத்திரிகர்கள் பயணித்த வான் மீது கல்வீசி தாக்குதல்

வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து சென்ற யாத்திரிகர்களுக்கு பல்வேறு தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து. அவர்கள் சுமார் 10 பேருந்துகளில் பொலிஸ் பாதுகாப்போடு திருச்சி கொண்டு செல்லப்பட்டனர்.

திருச்சி விமான நிலையம் போகும்வழியில் காட்டூரில் சிலர், அந்த பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே திருச்சி பால்பண்ணை என்ற இடத்தில், இலங்கை பக்தர்கள் வந்த பேருந்தை வழிமறித்து மறியல் செய்ய முயன்ற சுமார் 60 பேரை பொலிசார் கைது செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply