ரணில், திஸ்ஸவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குவதா, இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பை அறிவிக்கும் பொருட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி வரை அந்த தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று குறிப்பிட்டது.

சட்டத்தரணி மஹின் குணசேகர தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதெ நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply