இலங்கையர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசும் கூட்டு – விமல்
மத்திய அரசாங்கத்தின ஒத்துழைப்பின்றி தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜைகள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்திட்டமிட்ட வன்முறைகள், மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி அரங்கேற்றப்படமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்அடக்குமுறைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமைவருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தென் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளையாட்டு வீரர்கள், இராணுவப்படையினர், யாத்ரீகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான இலங்கைப் பிரஜைகள் மீதுதாக்குதல் நடத்தி வருவதாகவும், இதே தாக்குதல்களை இலங்கையர்கள் இந்தியர்கள் மீதுநடத்தினால் என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையுடன் மெய்யான உறவுகளைப் பேண வேண்டுமென இந்தியா கருதினால் இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளினால் இவ்வாறான தாக்குதல்கள்நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதன் பொறுப்பை ஜெயலலிதாவோ அல்லது மத்திய அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளுமா என விமல் வீரவன்ச கேள்விஎழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply