இந்தியா வரும் சகல இலங்கை மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உறுதி

இலங்கையைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சுற்றுலாப் பயணம் வந்துள்ள ‌சி‌ங்கள‌வ‌ர்களுக்கு எதிராக போராட்டங்கள் நட‌ந்து வரு‌கி‌ன்றன. நாகை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் பேருந்துகள் சேதம் அடைந்தன. சுற்றுலாப் பயணிகளும் காயம் அடைந்தனர்.

இலங்கை நாட்டவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைவதை அடுத்து, தங்கள் நாட்டவர் 178 பேரை பத்திரமாக அழைத்துச் செல்ல இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தமிழகம் உள்பட இந்தியா வரும் அனைத்து இலங்கை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், 2 லட்சம் இலங்கைவாசிகள் இந்தியா வர விசா வழங்கியிருப்பதாகவும், அதேபோல, ஒரு லட்சத்து 75 ஆயிரம் இந்தியர்கள் இங்கிருந்து இலங்கை செல்வதற்கு அந்நாட்டு தூதரகம் விசா வழங்கியதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply