48 மணித்தியாலங்களில் 181 பொதுமக்கள் வருகை:இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார்

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 181 பொதுமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார். 
 
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி வழங்கிய கால அவகாசத்தில் 181 பொதுமக்கள் முல்லைத்தீவிலிருந்து வெளியேறியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார்.

“வெள்ளிக்கிழமை 65 பொதுமக்கள் வந்ததுடன், சனிக்கிழமை 116 பேர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். இவர்கள் புல்லுமோட்டை மற்றும் விஸ்வமடுப் பகுதியை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்” என்றார் அவர்.

ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 3150 பேர் வன்னியிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கும் அதேநேரம்,  கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் 5000 பேர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதுடன், மேலும் பலர் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

அவ்வாறு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் வவுனியாவில் நான்கு முகாம்களிலும், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் உள்ள முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், புதுக்குடியிருப்பிலிருந்து 226 நோயளர்கள் கடந்த வியாழக்கிழமை வவுனியாவுக்கு அவழைத்துவரப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply