இலங்கை – இந்திய நல்லுறவிற்கு எதிரான முயற்சிகளிற்கு ரணில் கண்டனம்
இலங்கை – இந்தியாவிற்கு இடையில் காணப்படும் நீண்ட வரலாற்று நல்லுறவை பழுதாக்கவோ அதனை இல்லாது செய்யவோ எடுக்கப்படும் முயற்சிகளை கண்டிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை பிரஜைகள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்தோ தமிழ்நாட்டில் இருந்தோ வரும் நபர்களுக்கு இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற போதும் இருநாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவம் குறித்து ஆராய்ந்து இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வது இந்திய மத்திய அரசின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் போது இராஜதந்திர ரீதியில் அதற்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply