மூன்று மாகாண சபை தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.
இன்று மாலை 3 மணிவரையில் அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 50% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்திருந்தது.
பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி சிறுசிறு சம்பவங்களுடன் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல்கள் செயலகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
தற்போது வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply