ஜனாதிபதி – பான் கீ மூன் சந்திப்பர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கியநாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாத இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் நியூயோர்க்கிற்குவிஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயத்தின் போது பான் கீ மூனைசந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்67ம் அமர்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 26ம் திகதி உரையாற்றுவார் எனதெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீமூன் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply