வடக்கு தமிழ் மக்களும் அரசாங்கத்துடன் இணைந்து இருக்கின்றனர்

தென்னிலங்கை மக்களைப் போலவே, வடக்கில் தமிழ் மக்களும் அரசாங்கத்துடன் இணைந்து இருக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் உணர்த்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கோடு சம்பந்தப்பட்ட கிழக்கு மக்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் தெளிவாக தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தேர்தலில் அரசாங்கம் நேர்மையான வழியில் வெற்றி பெறவில்லை என்று ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.  ஜே வி பியின் பொது செயலாளர் டில்வின் செல்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கம் தேர்தல்சட்டங்களுக்கு முறணாக செயற்பட்டே இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை இந்த முறை தேர்தல்கள் மூலம் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்துக்கு தெளிவான செய்தியை அனுப்பி இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி வாக்களித்த கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் உழைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply