இராணுவ அணுகுமுறை முற்றாக மாற்றப்படவுள்ளது?
வன்னி இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதால் இராணுவத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவிருப்பதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ-9 வீதியின் தென்பகுதியில் மிகுதியாக எஞ்சியிருக்கும் 300 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களைத் தடுப்பதற்கும், அவர்களை அழிப்பதற்கும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொமாண்டோப் படையினரை உள்ளடக்கிய குழுக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காட்டுப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் இரகசியமான தாக்குதல்கள் மற்றும் மறைந்திருந்து நடத்தும் தாக்குதல்களைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், பெருமளவு மக்கள் தற்பொழுது மீட்கப்படாத பகுதியில் இருப்பதால் கட்டுநாயக்கவிலுள்ள ஜெட் படைப்பிரிவினருக்கு தாக்குதல்களை நடத்தமுடியாத நிலை தோன்றியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிபீர், மிக்-27 மற்றும் எவ்.7 விமானங்கள் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களில் முக்கிய பங்கினை வகித்திருப்பதுடன், இந்த விமானங்கள் 1,400 தாக்குதல்களை நடத்தியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply