கிழக்கில் ஆட்சி அமைக்கத் தயார்! மாகாண ஆளுனருக்கு கடிதம்

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க தயார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் உத்தியோகபூர்வமாக மாகாண ஆளுனருக்கு அறியப்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்றை ஆளுனரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தயார்படுத்துமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தினம் தமது அரசியல் உயர்பீடத்தை கூட்டவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply