தேர்தலைக் கொண்டு மதிப்பிட வேண்டாம்

தேர்தல்களில் கடைசியின் அடைவை கருத்திற்கொண்டு அதனை மதிப்பிடக்கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கிய துறைகளில் காணப்படும் மிகவும் மோசமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கட்சி நடத்தும் தேர்தலுக்கு அப்பாலான விடயமாகுமெனவும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி, சப்ரகமுவவில் 2 ஆசனங்களையும் கிழக்கில் ஒரு ஆசனத்தையும் இழந்துள்ளதால் தேர்தலில் பின்னடைவைக் கண்டுள்ளது. ஆயினும் அது வடமத்திய மாகாணத்தில் அதன் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துள்ளது.

கல்வித்துறை பிரச்சினைகளையும் விவசாயிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் தீர்க்க கட்சி போராட்டத்தை நடத்துமெனவும் அவர் கூறினார். தேர்தல்களினால் மக்கள் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாதெனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply