புகலிடக் கோரிக்கையாளர்களை நவ்றூ தீவுகளுக்கு அனுப்புவதற்கு ஆஸி. தீர்மானம்
அவுஸ்திரேலியா தமது முதல்கட்டமான ஒரு தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்களை நவ்றூ தீவுகளுக்கு இவ்வாரம் அனுப்பவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆவணங்கள் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்தவார இறுதியில் பபுவா நியூ கினியா அரசாங்கத்துடனும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லாட் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான உடன்படிக்கையை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நவ்றூ மற்றும் பப்புவா நியூ கினியாவிலுள்ள முகாம்களுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்ற இந்த மாத ஆரம்பத்தில் அங்கீகாரம் வழங்கிருந்தது.
ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடையும் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிகை அதிக்கரித்துள்ளது.
இவ்வாறான பயணங்களை மேற்கொண்ட பல படகுகள் விபத்துக்களாகியுள்ளதுடன், சிரமங்களையும் எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவ்றூ மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் சுமார் இரண்டாயிரம் பேர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வருடமொன்றுக்கு நாட்டிற்குள் உள்வாங்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிகையையும் ஆறாயிரத்து 250 ஆல் அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply