கிருஷ்ணாவின் அறிக்கை தொடர்பில் இந்திய கடற்தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் அறிக்கையை தமிழக கடற்தொழிலாளர் சங்கங்கள் கண்டித்துள்ளன.
இலங்கையில் இந்திய கடற்தொழிலாளர் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என கிருஷ்ணா கடந்த வாரம் ராஜ்ய சபாவில் தெரிவித்திருந்தார்.
எனினும் சில இந்திய பிரசைகள் போதைவஸ்து குற்றச்சாட்டிற்காக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணாவின் அறிக்கையை கண்டித்துள்ள தமிழக கடற்தொழிலாளர் சங்கங்கள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது உறுப்பினர்கள், போதைவஸ்து என்ற பொய் குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply