இலங்கை அகதிகளை ஆஸி. அனுப்பும் குழுவில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்

இந்தியாவின் மங்களூரில் 84 சட்டவிரோதமாக இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் போது கைது செய்யப்பட்ட முகவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

துணுக்காய் பிரதேசத்தை சேர்ந்த இவர் துப்பாக்கிகளை இயக்குவதிலும் உந்துகனைகளை இயக்குவதிலும் சிறந்த தேர்ச்சியை கொண்டிருந்ததாக மங்களூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த முகவர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் வகையில் கொண்டிருந்த திட்டங்களையும் மங்களூர் காவற்துறையினர் விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply