ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் பலி
ஆப்கானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குந்துஸ் நகரம். இப்பகுதியில் செல்வாக்கு பெற்ற படைத்தலைவன் ஒருவனுக்கு ஆதரவாக நடந்த பொதுக் கூட்டத்தில் நேற்று தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 காவலர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக 1,30,000 நேட்டோ படையினர் சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் வரும் 2014ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற உள்ள நிலையில்இ இதுபோன்ற தாக்குதலுக்கு எதிராக ஆப்கான் படையினர் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது.
இப்பகுதியில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாத இறுதியில் நடந்த தாக்குதலுக்கு 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply