கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும்
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதி வரையில் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட 94 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
எஞ்சிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு சில காலம் தேவைப்படும் என தேசிய நிலக்கண்ணி வெடி அகழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுவது தொடர்பில் காலக் கெடுகள் எதுவும் விதிக்கப்படாத போதிலும், விரைவில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டளவில் முழுமையாக நிலக்கண்ணி வெடிகளை அகற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும், யுனிசெப் அமைப்பும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு பாரியளவில் உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply