உதயகுமார் பொலிஸில் சரணடைய மறுப்பு
கூடன்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ளார்.
கூடன்குளத்தில் நேற்றைய தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின்பு, காவல்துறையினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் களைத்தனர்.
இதனிடையே உதயகுமார், ஜேசுராஜன், புஸ்பராயன், முகிலன் ஆகியோரை மக்கள் படகில் ஏற்றி பாதுகாப் பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்பு அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நேற்று முதல் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கினர்.
இன்று மதியம் 4 மணி அளவில் உதயகுமாரோடு அவரது சகாக்களும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். அவர்களிடம் மக்கள் நீங்கள் காவல்துறையினரிடம் கைதாகக்கூடாது என்று கண்ணீர் மல்க, அவர்களிடம் கூறினார்கள்.
இந்த மக்கள் மீது தடியடி செய்யக்கூடாது. அவர்களை துன்புறுத்தக்கூடாது. அவர்கள கஷ்டப் படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்களே முன்வந்து கைதாகிறோம் என்று கூறினார் உதயகுமார்.
இந்நிலையில் உண்ணாவிரத பந்தலுக்கு சென்று பேசிய அன்னா ஹசாரே முக்கிய குழு உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால், உதயகுமார் பொலிசில் சரணடைய தேவையில்லை, சரணடைய வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து உதயகுமார் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply