இந்திய நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார் – டக்ளஸ்

இந்திய நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் முறையின் ஊடுhக விசாரணைகளுக்கு முகம் கொடுக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1994ம் ஆண்டு சென்னை நீதிமன்றம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என அறிவித்திருந்தது.

தமக்கு எதிரான பிணை மனுசமர்ப்பிக்க முடியாத பிடிவிராந்தினை நீதிமன்றம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் கோரியுள்ளார்.

1986ம் ஆண்டு சோலைமேடு பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்ததாக அமைச்சர் டக்ளஸ் மற்றும் அவரது சகாக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தமக்கு எதிரான விசாரணைகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முகம் கொடுக்கத் தயார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply