ஐநா குற்றச்சாட்டுகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் – பீரிஸ் நம்பிக்கை

ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் என்று வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு சாதகமாக இருப்பதாகவும், மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை எடுத்து காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை வரமாட்டார் என்றும், அவரது பிரதிநிதிகளே இலங்கை வருவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் வருகையை தடை செய்வது இலங்கைக்கு உகந்ததாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கும் பணிகள், ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்;பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தின் போது, காலநிலை குறித்தே இலங்கை அதிக கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply