தமிழ் கூட்டமைப்பு எம்.பிகள் தலைமறைவாகும் நிலை:ஆனந்தசங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலை வர் ஆனந்தசங்கரி தெரிவித்தார். புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:-

புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது.புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர்.

ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply