மேலதிக மாவட்ட நீதிபதி அரவிந்த பெரேரா பணிநீக்கம்
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி அரவிந்த பெரேரா, நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையின் தீர்மானத்தின்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நீதிபதி தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றை பரிசீலித்து பார்த்ததன் பின்னர் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி அரவிந்த பெரேரா குறித்து அண்மையில் பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply