இரண்டு ஆண்டுகளில் 2,200 கோடி திரட்டிய தலீபான்கள்
கடந்த 2011-2012-ம் நிதி ஆண்டில், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ரூ.2,200 கோடி நிதி திரட்டி இருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு ஒன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.
நன்கொடை மூலமும், அபின் உற்பத்தி, குடிநீர், மின்சப்ளை மீதான வரி விதிப்பு மூலமும், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பணம் பறிப்பு மூலமும் இந்த நிதியை தலீபான்கள் திரட்டி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதியில், ரூ.1,500 கோடி, தலீபான் தலைமையகத்துக்கு சென்றதாகவும், மீதிப்பணத்தை கீழ்மட்டத்தில் உள்ள தலீபான்கள் செலவழித்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply