தமிழ்நாட்டிற்கான பயண எச்சரிக்கை விரைவில் விலக்கப்படும்

தமிழ்நாட்டுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில், நடைமுறையில் உள்ள பயண எச்சரிக்கை, விரைவில் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சின் செயலாளர் அமுனுகம கருணாதிலக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் தஞ்சாவூர் பகுதியில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமையை அடுத்து, இலங்கை அரசாங்கம் தமிழகத்துக்கு செல்லும் இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது.

எனினும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் பின்னர் பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கருணாதிலக்க குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply