மூன்று மாதத்தில் 1,400 பேர் கடற்படையால் கைது
கடந்த மூன்று மாத காலப்பகுதியினுள் இலங்கை கடற்படையினரால் 1400 பேர் அகதிகளாக செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டனை சேர்ந்த ஒருவரும் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் செயற்பாடு தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார். இது பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply