2006ம் ஆண்டு காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் வாரமளவில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணக் கிளை அறிவித்துள்ளது.

இந்த விசாரணைகளை நடாத்த கொழும்பிலிருந்து பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

காணாமல் போனோர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு உறவினர்களிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரீ. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply