முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் வார இறுதியில் அறிவிப்பு
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை இந்த வார இறுதியில் அறிவிக்கவிருப்பதாக அதன் தலைவர் அமைச்சர் ரௌவுப் அக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதன் மூலம், தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பது குறித்து கருத்துக்கள் இடம்பெற்றன.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு இயலுமை இருப்பதாக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply