வடக்கு, கிழக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை காண்பதே பெருமகிழ்ச்சி
ஜனநாயகம் என்பது ஒரு பயணம் எனவும் அது பயண முடிவு அல்லவெனவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது கமலேஷ் ஷர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஜனநாயகம் தொடர்பில் மக்கள் மத்தியில் பிரச்சினை எற்பட்டுள்ளதாகவும் ஆளுங் கூட்டமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
பொதுநலவாய அமைப்பில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த ஒரு நாடாக இலங்கை திகழ்கின்றதுடன் இந்த அமைப்பின் ஓர் ஆரம்ப உறுப்பு நாடாகவும் இலங்கை விளங்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஜனநாயகம் தொடர்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என்பது ஒரு பயணம் என்றும் அது பயணம் முடிவுறும் இடமில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை தமது கண்களால் காணக்கிடைத்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்தபோதே பொதுநலாவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் இந்த கருத்தினை கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கூட்டத்தொடர் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் பாரியார் பப்லி ஷர்மா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றும் நேற்று இடம்பெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply