இலங்கை சிங்கள பௌத்த நாடு! மிருகப் பலி என்ற பேச்சுக்கே இடமில்லை
இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் மிருக பலியை அனுமதிக்கவில்லை. எனவ காட்டுமிராண்டித்தனமான மிருக பலியை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் ஆசி வேண்டியே முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி நடத்தப்படுவதென்றால் அதனைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மிருக பலியைத் தடுப்பதற்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம். மக்களைத் தெளிவுபடுத்தினோம். நீதிமன்றம் சென்றோம். ஆனால் முடியாமல் போய் விட்டது. எனவே இலங்கையில் மிருக பலியைத் தடுப்பதற்காக பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றைக் கொண்டு வரவுள்ளோம்.
அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த மிருக பலி நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்புள்ளவர்கள் இவ் விடயத்தில் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply