ஜனாதிபதி மஹிந்தவின் கடும் கண்டனம்! அதிமுக செயற்குழுவில் தீர்மானம்
இலங்கை ஜனாதிபதி இந்தியா வர கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என, ம.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் நடந்த ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். அரியலூர் ஒன்றிய செயலாளர் தங்கவேலு வரவேற்றார். கட்சியின் மாவட்ட செயலாளர் சட்டத்தரணி சின்னப்பா பேசிய இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செப்டெம்பர் 15ம் திகதி கரூரில் ம.தி.மு.க., சார்பில் நடக்கும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாநாட்டில், அரியலூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான வேன், கார், மற்றும் பஸ்களில், ம.தி.மு.க.,வினர் திரளாக சென்று பங்கேற்க வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு, 21ம் திகதி வரும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆர்பாட்டத்தில், அரியலூர் மாவட்ட ம.தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்க வேண்டும்.
கூடங்குளம் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான பொலிஸை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply