மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் விரைவில் அனுப்பவும்
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 18ம் திகதிக்கு முன் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அரசியல் கட்சி செயலாளர்களிடம் தேர்தல்கள் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பின்னர் குறித்த நபர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெற்றிபெற்ற வேட்பபாளர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை வழங்காததால் வர்த்தமானியில் அவர்களது பெயர்களை பிரசுரிப்பது தாமதமானது.
இதேவேளை, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்களின் பெயர்கள் இன்று பெரும்பாலும் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற எச்.பீ.சேமசிங்கவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் பதவி மீண்டும் மஹீபால ஹேரத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply